ஒவ்வொரு மாதமும் இந்திய திரை உலகில் இருக்கும் பிரபல நடிகர் நடிகைகளின் பட்டியல்களை கணக்கெடுத்து வெளியீட்டு வரும் ஆர் மேக்ஸ் மீடியா நிறுவனம் இம்முறை வித்தியாசமாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை குறித்த லிஸ்ட்டை வெளியிட்டு உள்ளது. அது தற்பொழுது வைரலாகி வருகிறது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கப்பட்டு ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் யாரெல்லாம் மக்களிடையே அதிகமான வரவேற்பை பெற்றுள்ளார்கள் என்ற பட்டியலை ஆர்மேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இப்பட்டியலில் முதல் இடத்தை ஜிபி.முத்து பிடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து ரட்சிதா மகாலட்சுமி, ஆயிஷா, ஜனனி, அமுதவாணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த சீசனுக்கு கடந்த சீசனை விட மக்களிடையே அதிக வரவேற்பு இருப்பதாக டிஆர்பி ரேட்டிங்கை வைத்து கணிக்கப்பட்டுள்ளது.
Ormax Characters India Loves: Top 5 most popular #BiggBossTamil6 contestants (Oct 9-14)#OrmaxCIL pic.twitter.com/IxqygmVMRV
— Ormax Media (@OrmaxMedia) October 16, 2022