Overall Collection of Kadhaluku Mariyathai Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்குனர் மகனாக அறிமுகமாகியிருந்தாலும் தன்னுடைய திறமையால் இன்று தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக உயர்ந்துள்ளார்.
இவரது நடிப்பில் வெளியாகி மொத்த ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படங்களில் ஒன்று காதலுக்கு மரியாதை.
சங்கிலி முருகன் தயாரிப்பில் இயக்குனர் பாசில் இயக்கத்தில் ரூபாய் 2 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்பதைப் பார்க்கலாம் வாங்க.
தமிழ்நாடு – ரூபாய் 13.75 கோடி
கேரளா – ரூபாய் 25 லட்சம்
இந்தியாவின் மற்ற பகுதிகளில் – ரூபாய் 15 லட்சம்
ஓவர்சீஸ் நாடுகள் – ரூபாய் 90 லட்சம் என உலகம் முழுவதும் ரூபாய் 15 கோடி வசூல் செய்துள்ளது.
இந்தப் படத்தில் விஜய் மற்றும் ஷாலினி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இன்றுவரை தமிழகத்தில் காதலர்கள் கொண்டாடும் திரைப் படமாக இப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.