தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் மார்க ஆண்டனி.
ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வினோத் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து படம் வசூல் வேட்டையாடி வரும் நிலையில் தற்போது வரை இந்த படம் மொத்தமாக 101 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
சந்திரமுகி 2 உட்பட பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியும் மார்க் ஆண்டனி படத்தின் வசூல் நல்ல முறையில் இருந்து வருவது படக்குழுவினரை உற்சாகப்படுத்தி உள்ளது.
