தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமான இவர் தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் இன்று உச்சத்தை தொட்டுள்ளார்.
இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று வில்லன். இந்த படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் மீனா மற்றும் கிரண் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர்.
ரூபாய் 6 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்தப் படத்தின் மொத்த வசூல் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
உலகம் முழுவதும் இந்த படம் ரூபாய் 23 கோடி வசூல் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் ரூபாய் 19 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும் கேரளாவில் 75 லட்சம், கர்நாடகாவில் 40 லட்சம், இந்தியாவின் மற்ற பகுதிகளில் ரூபாய் 20 லட்சம் வசூல் செய்துள்ளது.
ஓவர்சீஸ் நாடுகள் மூலமாக ரூபாய் 2.65 கோடி வசூல் செய்துள்ளது.