தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நேற்று பாவா செல்லதுரை இனிமேல் ஒரு நிமிடம் கூட இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாது என வாண்ட்டடாக வெளியேறினார். இப்படியான நிலையில் இவர்கள் மொத்தமாக வாங்கி சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் வெளியேறிய அனன்யா ஒரு நாளைக்கு பனிரெண்டாயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு வந்த நிலையில் முதல் வாரத்திற்காக மொத்தமாக அவர் ரூபாய் 84 ஆயிரம் உடன் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து பாவா செல்லதுரை அவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 28 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் மொத்தமாக ரூபாய் 1.96 லட்சத்துடன் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.