தமிழ் ரசிகர்கள் மனதில் களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக இடம்பிடித்தவர் நடிகை ஓவியா. பட வாய்ப்புகள் பிரித்தும் இல்லாத நேரத்தில் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.
பிக் பாஸ் மூலம் இதுவரை யாருக்கும் கிடைக்காத அளவில் ரசிகர்கள் பட்டாளம் கிடைத்தது. அதுமட்டுமின்றி ஓவியா ஆர்மி என்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானாது.
சமீபகாலாமாக ஓவியா எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை. இந்நிலையில் அண்மையில் தனது ரசிகர்களுக்காக பல மாதங்கள் கழித்து பேட்டி கொடுத்துள்ளார்.
இதில் பல விதமான சுவராஸ்ய விஷயங்களை பதிவு செய்து வந்த ஓவியா, ” ஒருவரை பார்த்தவுடன் நம் வாழ்க்கையில் இனைத்து கொள்ள முடியாது, அதெல்லாம் தானே நடக்க வேண்டும். ஒரு நாள் பார்த்து ஒரு நாள்ல எல்லாத்தையும் பண்ணிட முடியாது ” என கூறியுள்ளார்.
View this post on Instagram