Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனதற்கு காரணம் இதுதான் : பி வாசு விளக்கம்

p vasu about chandramukhi2 movie

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15-யிலிருந்து 28-ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது குறித்து இயக்குனர் பி.வாசு விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் Final Copy-ஐ கடந்த 8-ஆம் தேதி பார்க்க முடிவு செய்திருந்தோம். அன்று படத்தின் 480 ஷாட்களை காணவில்லை என அழைப்பு வந்தது. இப்படியெல்லாம் நடக்குமா என மனதில் தோன்றியது. பின்னர் 4,5 நாட்கள் தீவிரமாக தேடி காணாமல் போன ஷாட்களை கண்டுபிடித்தோம். இதனால் தான் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது என்று பேசினார்.

p vasu about chandramukhi2 movie
p vasu about chandramukhi2 movie