தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா.ரஞ்சித். வெரைட்டியான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் “தங்கலான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
KGF மக்களின் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படம் பற்றியும் நடிகர் விக்ரம் குறித்தும் பா.ரஞ்சித் பகிர்ந்திருக்கும் சமீபத்திய பேட்டியின் தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதில் அவர், இப்படத்திற்காக நடிகர் விக்ரம் ஆறு ஏழு மாதங்களாக எந்த படங்களிலும் கமிட்டாகாமல் காத்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு இதற்காக தனது எடையை குறைப்பதுடன், எவ்வித தயக்கமும் காட்டாமல் தனது தோற்றத்தையும் மாற்றிக் கொண்டார். மேலும் என்னுடைய டைரக்ஷன் ஸ்டைல் அவருக்கு பிடித்து விட்டதால் இப்படத்திற்காக என்ன வேணாலும் செய்கிறேன் என்றும் என்னிடம் கூறினார். என்று விக்ரம் குறித்து பாராட்டி பேசிய பா.ரஞ்சித் இப்படம் இதுவரை 105 நாட்கள் நடைபெற்று முடிந்திருப்பதாகவும் இன்னும் 20 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இவரது இந்த சுவாரசியமான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீது உள்ள எதிர்பார்த்து அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.