தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் தற்போது விக்ரம் நடிப்பில் பலத்தை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தை தீவிரமாக இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பா.ரஞ்சித் அவர்கள் தனது நெருங்கிய நண்பரான இயக்குனர் மாறி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தை பாராட்டி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.
அப்பதிவில் அவர், ‘வெற்றி உன்னை சூடிக் கொள்ளட்டும்’ எனக் குறிப்பிட்டு மாரி செல்வராஜை பாராட்டி பதிவிட அதற்கு மாரி செல்வராஜ் ‘லவ் யூ அண்ணா’ என்று மகிழ்ச்சியுடன் ரீட்வீட் செய்திருக்கிறார். இவர்களது இந்த பதிவுகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Love u annna @beemji ❤️❤️❤️❤️ https://t.co/UYXPX4lA3Q
— Mari Selvaraj (@mari_selvaraj) June 29, 2023