Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மறைந்த கேப்டன் பத்மபூஷன் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்து

Padma Bhushan Captain Vijayakanth Birthday

தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென ஒரு நீங்கா இடம் பிடித்தவர் தெய்வத்திருமகன் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த். வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கியவர் விஜயகாந்த்.

அதனைத் தொடர்ந்து அம்மன் கோவில் கிழக்காலே, பூந்தோட்ட காவல்காரன், சின்ன கவுண்டர், வானத்தைப்போல போன்ற 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தார் கேப்டன்.

இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 2023 டிசம்பர் 28ஆம் தேதி இன்னுலகை விட்டு பிரிந்தார். இது திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அவர் இறந்த பிறகு அவருக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது அதனை பிரேமலதா விஜயகாந்த் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Padma Bhushan Captain Vijayakanth Birthday
Padma Bhushan Captain Vijayakanth Birthday

இப்படியான நிலையில் இவரின் 72 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின் நினைவிடத்தில் ரசிகர்களும், தொண்டர்களும், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் சங்க அலுவலகத்தில் அவருடைய திருவுருவப்படத்திற்கு சங்கத் தலைவர் திரு நாசர் ,மற்றும் பொதுச் செயலாளர் திரு விஷால், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் என பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.