Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

பாம்பாட்டம் திரை விமர்சனம்

pambattam movie review

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சம்ஸ்தானத்தை ஆண்டு வருகின்ற ராணி மல்லிகா ஷெராவத், பாம்பு கடித்து இறந்து விடுவார் என்று ஜோதிடர் ஒருவர் சொல்லுகிறார். இதனால், அந்த பகுதியிலுள்ள ஒட்டுமொத்த பாம்புகளையும் கொன்றழிக்க உத்தரவிடுகிறார். பாம்புகள் கொத்துக் கொத்தாய், கூட்டம் கூட்டமாய் பிடிக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. இதில் தப்பித்த பாம்பு ஒன்று மல்லிகா ஷெராவத்தை கொன்று விடுகிறது.அந்த பாம்பால் மகாராணியின் மகளுக்கும் ஆபத்து என்பதால் அந்த ராஜ குடும்பம் சமஸ்தானத்தை விட்டு வெளியேறுகிறது.அந்த அரண்மனையில் ராணியின் ஆவி சுற்றுவதாகவும், ராணியைக் கொன்ற பாம்பு அங்கேயே வசிப்பதாகவும், ஊர் முழுக்க பேசிக் கொள்ள, காவல்துறை அதிகாரி ஜீவன் அரண்மனைக்கு வருகிறார். மேலும் ராட்சத பாம்பை கொல்லவும் முயற்சி செய்கிறார்.

இறுதியில் ஜீவன் அந்த ராட்சத பாம்பை கொன்றாரா? ஜீவன் அந்த அரண்மனைக்கு வர காரணம் என்ன? ராணி மல்லிகா ஷெராவத்தின் ஆவி உண்மையில் இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர்கள் நாயகனாக நடித்திருக்கும் ஜீவன், தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இரண்டுமே பெரியதாக ஒட்டவில்லை. ராணியாக வருகிற மல்லிகா செராவத் கம்பீரத் தோற்றத்துடன் வந்து ஆங்காங்கே நடிப்பில் மிரட்டி விட்டு சென்றிருக்கிறார். இளவரசியாக வருகிற ரித்திகா சென் பயமும் பதட்டமும் கொண்ட நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

சுமன், ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, சரவண சக்தி, பருத்தி வீரன் சரவணன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.இயக்கம் ராஜ வம்சத்தை சுற்றி நடக்கும் மர்மத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வடிவுடையான். அரண்மனை, ராட்சத பாம்பு என பிரம்மாண்டமாக கொடுக்க நினைத்து இருக்கிறார். ஆனால், பெரியதாக எடுபடவில்லை. கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருந்தாலும் பார்க்கும் போது பிரம்மாண்டமாக தெரியவில்லை. அதிக லாஜிக் மீரல்கள் இருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்து இருக்கிறது.இசை பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் அம்ரீஷ். ஒரு சில இடங்களில் இரச்சலையும் கொடுத்து இருக்கிறார். ஒளிப்பதிவு இனியன் ஜெ ஹாரிஸின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.

pambattam movie review
pambattam movie review