தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் பாண்டவர் இல்லம். குடும்ப கதையாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
இத சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அனு. சீரியலிலும் நிஜத்திலும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருந்து வந்த இவர் பிரசவம் காரணமாக பாண்டவர் இல்லம் சீரியலில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து குழந்தையை பெற்றுக் கொண்ட அனு தற்போது குடும்பத்தை கவனித்து வருவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களை இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram