தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய உடன் பிரபலமான சீரியல் களில் ஒன்று பாண்டவர் இல்லம். திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் முதலில் வில்லியாக ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அனு.
அதன் பிறகு இவர் ரோல் பாசிட்டிவாக மாறி தற்போது அனைவருக்கும் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிறியது தற்போது ரோஷினி கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட்டு வந்தது. இவர் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக இருந்து வந்தார்.
சமீப நாட்களாக பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினியை பார்க்க முடியாமல் இருந்து வருகிறது. இதற்கு காரணம் ரோஷினி பிரசவம் காரணமாக ஓய்வில் இருந்து வருவது தான். தற்போது அவர் தனக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாண்டவர் இல்லம் சீரியல் ரோஷினிக்கு குழந்தை பிறந்தாச்சு… அவரே வெளியிட்ட தகவல்
கடந்த 2017 ஆம் ஆண்டு விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் 5 வருடத்திற்கு பிறகு அம்மாவாக்கி உள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.