தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர வரும் திங்கள் முதல் அதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் ஸ்டாலின் அப்பாவாக நடித்த நிரோஷா அம்மாவாக நடித்த மூன்று மகன்களை குறித்த கதையாக ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாக ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1-ல் 3 தம்பிகள் இதில் மூன்று மகன்கள் அவ்வளவு தான் வித்தியாசம் என கலாய்த்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டுப் பெண்களை அடக்கி ஆள்வது போல இதில் மகன்களை அடக்கியாள நினைக்கிறார் எனவும் கூறி வருகின்றனர்.
மேலும் இந்த சீரியலில் கதை ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த தவமாய் தவமிருந்து சீரியல் போல இருக்கும் எனவும் கிண்டல் அடித்து வருகின்றனர். தவமாய் தவமிருந்து சீரியலில் மகன்களுக்காக எல்லாவற்றையும் செய்யும் அப்பாவை கடைசியில் பிள்ளைகள் கைவிட்டு துரோகம் இழைக்க அடுத்து நடந்தது என்ன என்பதுதான் சீரியல் கதையாக இருந்தது.
இந்த சீரியலிலும் மூச்சுக்கு முந்நூறு முறை என்னைப் போல மகன்களை வளர்க்க முடியுமா என சொல்லி வரும் பாண்டியின் மகன்கள் கடைசியில் அவருக்கு துரோகம் செய்வார்கள் அப்படித்தான் கதை இருக்கப் போகிறது என பலரும் யூகித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்த ஹாசினியும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.