Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரொம்ப வலி, எதிரிக்கு கூட வரக்கூடாது, கஷ்டமானது- ஒரு வருடம் கழித்து சோகமான விஷயத்தை கூறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா

pandian stores jeeva about covid 19

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்ணன்-தம்பிகள் என்றால் இவர்களது குடும்பம் போல் இருக்க வேண்டும், கூட்டுக் குடும்பம் என்றால் இதுதான் என பலரும் பாராட்டுவதோடு சீரியலுக்கு பெரிய வரவேற்பையும் கொடுத்து வருகிறார்கள்.

சீரியலில் அடுத்தடுத்து நிறைய திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த தொடரில் ஜீவா என்ற வேடத்தில் நடித்து வருபவர் வெங்கட்.

இவர் கடந்த வருடம் இதே நாட்களில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிறைய கஷ்டங்கள் அனுபவித்தாராம்.

அந்த நாட்களை நினைவுகூர்ந்த அவர் கொரோனா பாதிப்பின் ஒரு வருடம். ரொம்ப வலி, படபடப்பு, ஸ்ரஸ் என எதுவுமே போகவில்லை. துரோகி, எதிரிக்கு கூட வரக்கூடாது என இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.