விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
இதில் முக்கிய நாயகியாக நடிக்கும் மீனா நிஜத்திலும் கர்ப்பமாக இருப்பதால் நடிப்பிற்கு இடைவேளை விட்டார்.
ரசிகர்கள் அவருக்கு பதிலாக வேறு யாராவது கமிட்டாவார்களா என யோசித்தனர். ஆனால் அவரது கதாபாத்திரத்திற்கு யாரும் வரவில்லை, அதற்கு பதிலாக புதிய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகை மீனா என்கிற ஹேமா.