தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி சீரியல்களிலும் கவனம் செலுத்தி வரும் சுஜிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு டாட்டா சொல்ல போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணங்களாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது.
ஒன்று சீரியல் ஆரம்பமான நாளிலிருந்து தற்போது வரை சம்பளத்தில் மாற்றம் இல்லாமல் இருந்து வருவதால் அவர் வெளியேற உள்ளதாக சொல்கின்றனர்.
இது மட்டுமின்றி அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது அதன் காரணமாக வெளியேறுவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.