“நடிகை த்ரிஷா நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் பரமபத விளையாட்டு. திருஞானம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
24Hrs நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளனர். மறைந்த முதலவர் ஜெயலலிதாவின் இறப்பின் மரமங்களை காட்சி படுத்தும் விதத்தில் இந்த ஸ்னீக் பீக் காட்சி உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.