கதைக்களம் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி தம்பதிக்கு மிதுல் என்ற மகன் இருக்கின்றான். அனைத்து பெற்றோரை போலவே மிதுலுக்கு என்ன வேண்டுமோ அதை சரியாக கொடுத்து, எந்த வித குறையில்லாமல் வளர்க்க முயற்சித்து வருகின்றனர். இதற்காக சிவா பல இடத்தில் கடன் வாங்குகிறார் அதனை ஒழுங்காக நேரத்தில் கட்டமுடியாதலால் கடன்காரர்களின் தொல்லை அதிக்கரிக்கிறது.இப்பொழுது சூழ்நிலைக்காரணமாக இருசக்கர வாகனத்தில் தன் மகனுடன் நீண்ட தூரம் பயணிக்கும் மிர்ச்சி சிவா, தனது மகனின் உண்மையான விருப்பம் மற்றும் அவன் வாழ நினைக்கும் வாழ்க்கைப் பற்றி எப்படி தெரிந்துக் கொள்கிறார். இதனை மிகவும் நகைச்சுவை கலந்து சிந்திக்க வைக்கும் படமாக உருவாகியுள்ளது பறந்து போ.
கோகுல் என்ற கதாபாத்திரத்தில் தந்தையாக நடித்திருக்கும் மிர்ச்சி சிவா அவருக்கே உரிய உடல் மொழி மற்றும் டைமிங் வசனங்கள் மூலம் மக்களை சிரிக்க வைக்கிறார்.சிவாவின் மகனாக நடித்திருக்கும் மித்துல் ரியான் வயதுக்கு ஏற்ற குறும்புதனத்தால் பார்வையாளர்களை கவர்கிறார்.சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அஞ்சலி, அஜு வர்கீஸ் கொடுத்த கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளனர் அவர்களது நடிப்பால் ஸ்கோர் செய்துள்ளனர்.விஜய் யேசுதாஸ், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, பாலாஜி சக்திவேல், தேஜாஸ்வினி மற்றும் சில சிறுவர்கள் என தந்தை – மகன் பயணத்தில் தலை காட்டுபவர்களாக இருந்தாலும், பார்வையாளர்கள் மனதில் நின்று விடுகிறார்கள்.
இயக்குநர் ராமின் திரைப்படம் எப்பொழுதும் ஒரு இருக்கமான அதிர்வையும், மனநிலையை பிரதிபலிக்கு வகையில் கதைகள் அமைந்திருக்கும். ஆனால் இப்படம் அதற்கு அப்படியே நேர் எதிராக மிகவும் நகைச்சுவையாக உருவாகியுள்ளது. கதையை கையாண்ட விதம் கதையில் சோர்வில்லாமல் நகைச்சுவையாக கொண்டு சென்றது பாராட்டுகள். பெற்றோர்களுக்கு உள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது. நாம் நம் பிள்ளையை அவர்கள் போக்கில் வளர்க்க வேண்டும் என்பதை மிக ஆழமாகவும் அழகாகவும் கூறியுள்ளார்.
நாம் சாதாரணமாக கடந்து செல்லும் மலைகள், மரங்கள், குலங்கள், பழங்காலத்து சாலை மண்டபம் என அனைத்தையுமே ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கும் என்.கே.ஏகாம்பரம்,
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் பாடல்களாக அல்லாமல் வசனங்களாக மனதை வருடுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை நேர்த்தி. சுமார் 18 பாடல்கள் படத்தில் இருந்தாலும் அதை ரசிக்கும்படி திரைக்கதையுடன் அழகாக இணைந்து பயணித்திருக்கிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.”,
