Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் குறித்து பாராட்டி பார்த்திபன் போட்ட பதிவு

parthiban tweet about actor ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது தந்தை சுப்பிரமணியன் கடந்த நான்கு வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவு அஜித் குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரை பிரபலங்களும், ரசிகர்களும் நடிகர் அஜித்குமாருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இதில் சில பிரபலங்கள் அஜித்குமாரின் இல்லத்திற்கு சென்று அவரது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இருந்த நிலையில் இதில் கலந்து கொண்டு இருந்த நடிகர் பார்த்திபன் பதிவிட்டிருக்கும் புகழ்ச்சி பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், ‘தந்தையின் மறைவின் போது நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது.சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி சொன்னார். மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்த அஜித் என்னருகில் சோழா பொன்னுரங்கம் “அமராவதி” தயாரிப்பாளர் நிற்பதை கண்டு இறங்கி வந்து அவருக்கு நன்றியை தெரிவித்து சென்றார். என்ன ஒரு பண்பு என நடிகர் அஜித்குமாரை பாராட்டி அப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.