தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி. இவர் கடந்த பிப்ரவரி 19ம் தேதியன்று அதிகாலை 3.30 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி தெரிவித்தனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் உயிரிழந்த மயில்சாமிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குனரமாக வலம் வரும் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது நடிகர் பார்த்திபன் மனித நேயம் மன்றம் சார்பாக அங்குள்ள பொது மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ‘மறையா மனிதன் மயில்சாமிக்கு’ என குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். இதற்கு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மறையா மனிதம் மயில்சாமிக்கு…! pic.twitter.com/ngYx5JLPt2
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 29, 2023