தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் பசங்க. இந்த படத்தில் அன்புக்கரசு என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் கிஷோர்.
13 வருடங்களுக்குப் பிறகு இவருக்கு இந்த படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திர விருது மற்றும் தேசிய விருது அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பசங்க பட கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. கிஷோரை விட ப்ரீத்தி குமார் நான்கு வயது மூத்தவர் என்பதால் இவர்கள் திருமணம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது.
இந்த நிலையில் கிஷோர் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தது ஏன் என பதில் அளித்துள்ளார். எனக்கு கிடைத்த இந்த பெண்ணை போல் வேறு ஒருவருக்கு கிடைத்திருந்தால் அவர்கள் இப்படி பேச மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் எங்கள் இருவருக்கும் பிடித்திருந்தது அதனால் திருமணம் செய்து கொண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.