Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பதான் படத்திற்கு குஜராத் மாநிலத்தில் எதிர்ப்பு. வைரலாகும் பரபரப்பு தகவல்

pathan movie latest update

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’. இந்த படத்திலிருந்து வெளியான முதல் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பதான் சமீபத்தில் “பதான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘அழையா மழை’ பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

பதான் இப்படம் நாடு முழுவதும் 25-ந்தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் டப்பிங் செய்தும் வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘பதான்’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாநிலத்தில் ஷாருக்கானின் ‘கட் அவுட்’ அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் அருகே உள்ள கர்ணாவதியில் இருக்கும் வணிக வளாகத்தில் ஷாருக்கான் கட் அவுட்டை பதான் படத்தின் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டு இருந்தது. அந்த கட் அவுட்டை பஜ்ரங்தள் தொண்டர்கள் அடித்து உடைத்து, சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

pathan movie latest update
pathan movie latest update