சிம்பு தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’. இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சிம்பு இந்நிலையில், பத்து தல படத்தின் இரண்டாம் பாடலான நினைவிருக்கா? என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளனர். இதனை பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
@arrameen @ShakthisreeG @KaviKabilan2 @nameis_krishna 🌺💜❤️🩹🎉EPI https://t.co/n2abEZ6VDy
— A.R.Rahman (@arrahman) March 13, 2023