Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிம்பு படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

Pathu Thala from march 18

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பத்து தல படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 18ம் தேதி மாலை 5மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.