தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒப்பேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கிங்ஸ்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான நம்ம சத்தம் பாடல் அண்மையில் வெளியாகி தற்போது வரை ரசிகர்களால் இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடி வரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய அப்டேட் வெளியாகி அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறது.
அதன்படி பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 18ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த சிம்பு ரசிகர்கள் இது குறித்த உறுதியான அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
#SilambarasanTR's New Look & Mass Entry. Locked & Loaded.. 🔥#PathuThala Audio launch on March 18th at Nehru Indoor Stadium 💥 pic.twitter.com/eMTfd9Ot1M
— VCD (@VCDtweets) February 23, 2023