Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தொடர்ந்து வசூலில் முன்னேற்றம்.. மாஸ் காட்டும் சிம்பு

pathu thala movie collection analysis update

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் 10 தல. ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படம் முதல் நாளில் உலக அளவில் 12 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது. மாநாடு படம் முதல் நாளில் ரூபாய் 8.5 கோடி வசூல் செய்தது.

அதன் பிறகு வெளியான வெந்து தணிந்தது காடு 10.68 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள 10 தல திரைப்படம் ரூபாய் 12.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

சிம்பு படங்களின் வசூல் படிப்படியாக உயர்ந்து இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.