Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

pathu-thala-movie-grand-audio-launch-event

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒப்பேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கிங்ஸ்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் கடந்த மாதம் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து நேற்றைய தினம் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழுவினர் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியின்போது பகிர்ந்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர்கள், பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மார்ச் 18 ஆம் தேதி மாலை நேரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் அந்நிகழ்ச்சியில் பல முன்னணி நடிகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவலை விரைவில் வெளியிடுவோம் என்றும் கூறியிருக்கின்றனர். அந்த தகவல் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.