கோலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இயக்குனர் கௌதம் மேனன் பிப்ரவரி 25ஆம் தேதி அவரது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இதற்கு பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்பு நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் பத்து தல திரைப்படத்தின் படக்குழு கௌதம் மேனன் இப்படத்தில் நடித்திருப்பதை உறுதிப்படுத்தி சிறப்பு போஸ்டரை வெளியிட்டு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
அந்தப் போஸ்டரில் அரசியல்வாதி கெட்டப்பில் இருக்கும் கௌதம் மேனன் சிம்புவுக்கு எதிராக மிரட்டலான லுக்கில் இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் இந்த ட்விஸ்ட்டா எதிர்பார்க்கல பயங்கரமா இருக்கு என கமெண்ட் செய்து அப்போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.
Wishing Our Beloved Filmmaker & Actor Gautham Vasudev Menon sir, a Very Happy Birthday 🥳✨ From Entire team of #PathuThala
Can't wait to see you in #AGR's world 🔥@menongautham #HappyBirthdayGauthamVasudevMenon #HBDGVM #HappyBirthdayGVM#Atman #SilambarasanTR pic.twitter.com/np4P6nknZF
— Studio Green (@StudioGreen2) February 24, 2023