தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளால் சினிமாவில் சறுக்கத்தை சந்தித்து வந்த சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தில் தயாரிப்பில் கௌதம் கார்த்திக், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
