Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

24 மணி நேரத்தில் பத்து தல படத்தின் டீசர் படைத்த சாதனை.படக்குழு கொடுத்த அப்டேட்

pathu thala movie teaser views update

கோலிவுட் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது ஒபேலி என் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு நேற்றைய முன் தினம் வெளியிட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த டீசர் தற்போது வரை இணையதளத்தை தெறிக்க விட்டு வரும் நிலையில் 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் படக்குழு அதிகாரவபூர்வமாக தெரிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.