கோலிவுட் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது ஒபேலி என் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதை படக்குழு கேக் வெட்டி செலிப்ரேட் செய்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
#PathuThala wrapped up – all set for a release on March 30th! pic.twitter.com/RuHQGrXMJk
— Siddarth Srinivas (@sidhuwrites) March 6, 2023