Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாசாக இருக்கும் பத்து தல இசை வெளியீட்டு விழாவின் என்ட்ரன்ஸ். வீடியோ வைரல்

pathuthala audio launch stadium video viral update

கோலிவுட் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது ஒபேலி என் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படம் இம்மாதம் வரும் 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருப்பதை படக்குழு முன்பே அறிவித்திருந்ததை தொடர்ந்து தற்போது இந்நிகழ்ச்சிக்காக தயாராகி வரும் அந்த அரங்கத்தின் என்ட்ரன்ஸ் வீடியோ ரசிகர்களால் வைரலாகி வருகிறது.