தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் அமீர். வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற இவர் பாவனியை காதலிப்பதாக சொன்னது மட்டுமல்லாமல் ஒரு நாளிரவு அவருக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் பாவணி. அமீர் ஒன்றும் என்னால் பிரபலமடையவில்லை அவர் நன்றாக விளையாடினார் அதனால் பிரபலமானார். அன்னைக்கு அமீர் எனக்கு கிஸ் கொடுக்கல, என் காதில் ஐ லவ் யூ என்று தான் சொன்னார். ஆனால் எடிட்டிங்கில் அதை வேறொரு விதமாக மாற்றி விட்டார்கள்.
இதுதான் வெளியில் சர்ச்சையாகி உள்ளது. உண்மையில் அன்று இப்படி நடக்கவே இல்லை. அமீர் அப்படி சொன்னதும் எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. வெட்கமாக இருந்தது என பாவணி கூறியுள்ளார். அதன் பிறகும் நாங்கள் இருவரும் நன்றாகத்தான் விளையாடினோம் என பாவனி தெரிவித்துள்ளார்.
பாவணியின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எடிட்டிங்கில் என்ன வேலை பார்த்து இருக்கீங்க விஜய் டிவி என கிண்டலடித்து வருகின்றனர்.
