ஞாபக மறதியால் பலரும் அவதிப்படுகின்றன. அவர்களுக்கான சில உணவுகளை நாம் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டம் நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் நினைவாற்றல் பாதிப்பு ஏற்படுகிறது. ஞாபக மறதி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
மூளை கூர்மையாக இருக்கவும் ஆரோக்கியத்திற்கும் நாம் உணவில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.
நினைவாற்றலை அதிகரிக்க வைட்டமின் பி6 அதிகம் உள்ள பாதாம் சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மேலும் ஊறவைத்து சாப்பிட்டால் சிறந்தது.
மேலும் வாதுமை கொட்டை மூளை சுறுசுறுப்பிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதில் ஆல்பா லினோலினிக் அமிலம் நினைவாற்றல் சக்தியை அதிகப்படுத்துகிறது.
இது மட்டும் இல்லாமல் ஆளி விதை மற்றும் பூசணி விதையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. முந்திரிப் பருப்பு அதிகமாக சாப்பிடுவது ஞாபக சக்திக்கு சிறந்தது. இதில் இருக்கும் புரதம் வைட்டமின் சி சத்துக்கள் செரிமான மண்டலத்தையும் வலுப்பெற செய்கிறது.