சர்க்கரை நோய் இருப்பவர்கள் எந்தெந்த பழங்களை சாப்பிட்டால் சிறந்தது என்று பார்க்கலாம்.
முதலில் கொய்யாப்பழம். கொய்யா பழத்தில் அதிகமான நார்ச்சத்தும் குறைந்த கலோரியும் இருப்பதால் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
இரண்டாவதாக ஆப்பிள். ஆப்பிள் நாம் அன்றாடம் சாப்பிடும் போது இன்சுலின் எதிர்ப்பிற்கு சிறந்ததாக இருக்கும்.
மூன்றாவதாக பப்பாளி.
பப்பாளி பழம் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
நான்காவது நாவல் பழம். நாவல் பழம் ஒரு ஆயுர்வேத மருந்தாகவே பயன்படுகிறது இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் மாவுச்சத்தை ஆற்றலாக மாற்றி விடும். இந்தப் பழத்தை நாம் எந்த நேரத்திலும் சாப்பிடலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நாவல் பழம் பெரும் அளவில் உதவுகிறது.
ஐந்தாவது பீச். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை அளிக்கும் பழங்களில் ஒன்று பீச்.
ஏனெனில் இந்த பழத்தில் இருக்கும் பயோஆட்டிவ் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். இதில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு.
எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த ஐந்து பழங்களை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்