Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

பிச்சைக்காரன் 2 திரை விமர்சனம்

pichaikkaran 2 Movie Review

பணக்காரனுக்கும் பிச்சைக்காரனுக்கும் இடையேயான மூளை மாற்று அறுவை சிகிச்சையால் ஏற்படும் பிரச்சினை குறித்து பேசும் படம் பிச்சைக்காரன் 2.

இந்தியாவின் டாப் 7 பணக்காரர்களில் ஒருவர் விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி). அவரது நெருங்கிய நண்பர் அரவிந்த் (தேவ் கில்) அவர் கூட்டாளிகளான இளங்கோ (ஜான் விஜய்) மற்றும் சிவாவுடன் (ஹரீஷ் பேரடி) இணைந்து விஜய் குருமூர்த்தியின் சொத்தை அபகரிக்க நினைக்கிறார். இதனால் விஜய் குருமூர்த்தியின் மூளையை மாற்ற நினைக்கும் நண்பர்கள் அவர்களது பேச்சை கேட்டும் படியான ஒரு நபரை தேடுகிறார்கள்.

அதில் சத்யா என்ற ஒரு நபரை கண்டுபிடித்து அவரின் மூளையை விஜய் குருமூர்த்திக்கு பொருத்துகின்றனர். இதனால் பிச்சைக்காரனாக இருந்த சத்யா பணக்காரனாக மாறிவிடுகிறான். ஆனால் இந்த மாற்றம் அவருக்கு பிடிக்கவில்லை. தன்னை விட்டுவிடும்படி கதறுகிறான். ஆனால், விஜய் குருமூர்த்தியின் நண்பர்கள் அவனை விட மறுக்கின்றனர்.

இறுதியில் யார் இந்த சத்யா? விஜய் குருமூர்த்தியின் சொத்தை அவரது நண்பர்கள் ஏன் அபகரிக்க முயல்கின்றனர்? சத்யாவிற்கு எதற்காக இந்த பணக்கார வாழ்க்கை பிடிக்கவில்லை? என்பதே படத்தின் மீதிக்கதை.

விஜய் குருமூர்த்தி, சத்யா என இரு வேடங்களில் நடித்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. காமெடி, எமோஷன் என எல்லா இடங்களிலும் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் நடித்திருப்பது ரசிகர்களை கவனிக்க வைக்க தவறியுள்ளது. கதாநாயகியான காவ்யா தாப்பர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, யோகிபாபு நடிப்பு கதையோட்டத்துக்கு பலம் சேர்த்துள்ளது.

விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகாகியுள்ள திரைப்படம் பிச்சைக்காரன் -2. திரைக்கதையை அருமையாக வடிவமைத்துள்ள விஜய் ஆண்டனி கதையை இயக்குவதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அதிகப்படியான சி.ஜி.காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதில் ஒரு சில காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது. கிளைமேக்சில் ஆண்டி பிகிலி போன்ற காட்சிகள் வெகுவாக கவர்ந்துள்ளது.

விஜய் ஆண்டனியின் பின்னணி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஓம் நாராயணனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளித்துள்ளது.

மொத்தத்தில் பிச்சைக்காரன் 2- ஈர்க்கவில்லை