தமிழ் சினிமாவில் பிரபலங்களின் விவாகரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜி.வி பிரகாஷ் சைந்தவி ஆகியோர் விவாகரத்து குறித்து அறிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தற்போது எதை தேடும் நிலவிலே பாடலில் இடம் பெறும் கலைஞர்கள் அனைவருமே விவாகரத்து வாங்கி உள்ள விஷயம் பேசுபொருளாகி உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்த இந்த பாடலை சைந்தவி உடன் இணைந்து பாடியிருப்பார்.
அதேபோல் தனுஷ் பாடலுக்கான வரிகளை எழுதியிருந்தார். தனுஷ் சைந்தவி ஜிவி பிரகாஷ் என அனைவருமே விவாகரத்து பெற்று சிங்கிளாக பிரிந்து வாழுகின்றனர்.
சமூக வலைதளங்களில் இது பற்றிய தகவல்கள் தான் வைரலாகி வருகின்றன.