தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக இருப்பவர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து சிம்புவுடன் கூட்டணி வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில் மீண்டும் வேறொரு ஹீரோருடன் படம் உறுதியாக இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் பரவி வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தயவுசெய்து என் அடுத்த படங்களின் லைன் அப் பற்றி வதந்திகள் பரப்பாதீங்க ஏதாவது இருந்தால் நானே முதல் நாளாக அறிவிக்கிறேன் நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதனால் இதுவரை பரப்பி வந்த வதந்திகளுக்கு இது ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கும். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறார்கள்.
Kindly don’t spread rumours about my project line ups! Kind request 🙏 I will be the first person to share if so any ! 🤗 thanks! https://t.co/mc76jOTXrV
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) March 21, 2025