தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-யிலிருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதையடுத்து இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை ஜெயலட்சுமி மறுத்தார். தொடர்ந்து சினேகன் அளித்த புகாரின்பேரில் சின்னத்திரை நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இது குறித்து நடிகை ஜெயலட்சுமி கூறியதாவது, “நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல். என் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பே காவல் துறை வழக்கு பதிவு செய்து விட்டதாக கூறுகின்றனர். எனக்கு யாரும் எதிரிகள் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் இதற்கு காரணம். நான் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு என் அறக்கட்டளையை ஆரம்பிக்கவில்லை” என்று கூறினார்.