தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று இருந்த திரைப்படம் பொன்னியன் செல்வன். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தனர்.
இப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனை முதல் பாகத்தை விட மிகப்பெரிய அளவில் பிரமோஷன் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இம்மாதம் வரும் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் படக்குழு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் பெரிய பாடல்கள் நான்கும் சிறிய பாடல்கள் இரண்டும் இடம்பெற்று இருப்பதாகவும் விரைவில் முதல் பாடல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Official – #PonniyinSelvan2 has 4 big songs and 2 small songs 🎵💥
Audio Launch confirmed on March 29th 💯
First single releasing very soon (Within a week*)🤩#PS2 #JayamRavi #ChiyaanVikram #Karthi pic.twitter.com/TpA6wEJIzj— AmuthaBharathi (@CinemaWithAB) March 17, 2023