Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா. ஸ்பெஷல் வீடியோ வைரல்

ponniyin-selvan-2-audio-trailer-launch

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் பொன்னியன் செல்வன். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் -2 திரைப்படத்தின் டிரைலர் வருகிற 29-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்களின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட்டையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற மார்ச் 29ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக ஸ்பெஷல் வீடியோ உடன் அறிவிக்கப்பட்டுள்ளது.