Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் எப்போது தெரியுமா.??

ponniyin selvan 2 movie first single release update

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பையும் அண்மையில் படக்குழு அறிவித்திருந்தது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இப்படம் குறித்த அடுத்த அப்டேட்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தற்போது புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது இப்படத்தின் முதல் பாடலாக அருண்மொழி வர்மன் -வானதியின் காதல் பாடல் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக வெளியாக இருப்பதாகவும் இந்தப் பாடலை படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானே பாடியுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பான உறுதியான தகவலை விரைவில் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ponniyin selvan 2 movie first single release update
ponniyin selvan 2 movie first single release update