தமிழ் சினிமாவில் பிரபல முன்னணியை இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘அகநக’ என்னும் பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது.
அப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் பிரமோஷனை படக்குழு தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள வி ஆர் மாலில் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் பிரமோஷனாக அப்படத்தின் செட்டப்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#PonniyinSelvan (#PS2) : Offline Promotion Started With The Chola THRONE Setup At VR Mall Chennai⚔️🔥#ChiyaanVikram | #JayamRavi | #Karthi | #Trisha | #ARRahman | #Maniratnam
APRIL 28 2023 Release.pic.twitter.com/Ioqh6B7GTm
— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 22, 2023