கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்-1”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.
முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
The Grand audio and trailer launch of #PS1 – September 6th at The Nehru Indoor Stadium!#PonniyinSelvan #CholasAreComing
In theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada!#ManiRatnam @arrahman @LycaProductions @Tipsofficial pic.twitter.com/4hDvSyKNzM
— Madras Talkies (@MadrasTalkies_) August 30, 2022