தமிழ் சினிமாவின் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கனவாக இருந்த நிலையில் அதனை உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.
500 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக்கியுள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், நடிகர் கார்த்தி என பல நடிகர்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அதேபோல் நடிகைகளில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என எக்கச்சக்கமான நடிகைகளும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் முதல் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என தகவல் கிடைத்துள்ளது. பல இடங்களில் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறதாம்.
இவை மொத்தமாக முடிவடைந்து ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து படத்தின் டீசர் டிரெய்லர் பாடல்கள் என அனைத்தையும் வெளியிட்டு உலகம் முழுவதும் பிரமோஷன் செய்ய உள்ளனர்.
இதன் காரணமாக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.
