Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹாங்காங் பயணம் மேற்கொள்ளும் பொன்னியின் செல்வன் டீம். காரணம் என்ன தெரியுமா?

PonniyinSelvan 1 movie gets nominated in 6 categories

மார்ச் 12 ஆம் தேதி (நாளை) ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) – சிறந்த திரைப்படம்,

சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்),
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி),
சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்),
சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும்
சிறந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி), ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பாக லைக்கா, திரு. ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும், மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் திரு. ஸ்ரீகர் பிரசாத் மற்றும் திரு. ரவி வர்மன் ஹாங்காங் பயணம் மேற்கொள்கின்றனர்.

PonniyinSelvan 1 movie gets nominated in 6 categories

PonniyinSelvan 1 movie gets nominated in 6 categories