தமிழ் சினிமாவின் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் பூஜா ஹெக்டே.
அதன்பின்னர் தமிழில் எந்த படத்திலும் நடிக்காத இவர் சூர்யாவுக்கு ஜோடியாக அருவா படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என மறுத்தார்.
இந்த நிலையில் இவரை படக்குழு ஒரு படத்தில் நடிப்பதற்காக அணுகியுள்ளது. ஆனால் அந்த படத்தில் முத்தக் காட்சி, படுக்கையறைக் காட்சி ஆகியவைகள் இருக்கின்றன.
இதனால் பூஜா ஹெக்டே தன்னுடைய சம்பளத்தை ரூபாய் 3 கோடியாக உயர்த்தி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான படக்குழு வேறு ஒரு நடிகையை அணுகலாம் என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.