Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் பிரபல நடிகை..

pooja-hegde-salary details

நயன்தாரா வாங்கும் சம்பளத்தை விட அதிகமான சம்பளத்தை வாங்கும் நடிகை பூஜா ஹெக்டே. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் ஹீரோக்களுக்கு போட்டிகள் இருப்பதுபோல நடிகைகளின் இடையையும் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் என்ற போட்டிகள் நடந்து வருகிறது அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக முதலில் இருக்கிறார். தற்போது நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கி முதலிடத்தை பிடித்துள்ளாராம் பூஜா ஹெக்டே.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்த படம் அவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. அதன்பிறகு அவர் தெலுங்கு சினிமாவில் அதிக கவனத்தை செலுத்தி இருந்தார். பின்னர் பூஜா ஹெக்டே தெலுங்கில் வெளியான “புட்ட பொம்மா” என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

பின்னர் நெல்சன் இயக்கத்தில் தற்போது வெளியான “பீஸ்ட்” படத்தில் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் பூஜா ஹெக்டே விற்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பிரபாஸ் உடன் இணைந்து ராதே ஷ்யாம் இந்தப் படத்தில் நடித்திருந்தார் இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியானது. அதன்பின் பூஜா ஹெக்டே வரிசையாகப் பல படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான சம்பளமாக 5 கோடி ரூபாவை வாங்கியுள்ளாராம். அதாவது நயன்தாரா வாங்கும் சம்பளத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிகமாக பூஜா ஹெக்டே வாங்கியுள்ளதாக தகவல் இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

pooja-hegde-salary details
pooja-hegde-salary details