தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பிறகு உலகம் அறியும் நடிகரான இவர் ராதா கிருஷ்ணா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ராதே ஷ்யாம்.
உலகம் முழுவதும் இன்று அதிகமான திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக பூஜா ஹெக்டே அவர்கள் ரூபாய் 3 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கூட பரவாயில்லை நடிகர் பிரபாஸ் இந்த படத்திற்காக ரூபாய் 100 கோடி சம்பளம் வாங்கியுள்ளது ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.